தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டார்...!
கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில், சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போது தப்பிச்சென்ற இளைஞர் கட்டுநாயக்க 18 ஆம் கட்டை பகுதியில் வைத்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
25 வயதுடைய, குறித்த இளைஞர் கட்டுநாயக்க வெலாங்கொட பகுதியில் தொழில் நிமித்தம் தங்கியிருந்துடன் கொவிட் 19 தொற்றுறுதியானவராக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தார்.
பதவிய - போஹாப்பிட்டடியவை சேர்ந்த அவர், கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்