இலங்கையில் புதுவித வைரஸ்! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

இலங்கையில் புதுவித வைரஸ்! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

இலங்கையில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களுக்கு புதுவித வைரஸ் பரவி வருகின்றது.

அடையாளம் காணப்படாத இந்த வைரஸினால் இதுவரை நாட்டின் பல இடங்களிலும் வளர்ப்பு நாய்கள் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுளள கால்நடை மருத்துவர் சுகத் பிரேமச்சந்திர,

தொடர் வயிற்றோட்டம், இரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் நாய்களுக்கு ஏற்பட்டு பின்னர் மரணமடைகின்றது என்று குறிப்பிட்டார்.

இதேவேளை அண்மைக்காலங்களில் கால்நடைகளுக்கும் புதுவித வைரஸ் பரவி வந்தமை குறிப்பிடத்தக்கது.