முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநாடு - ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்பு

முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநாடு - ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்பு

மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 

முதலமைச்சர் விஜய் தலைமையில் 2-வது நாள் மாநாடு தொடங்கியது. காலையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் ஒவ்வொரு அரசும் ஆண்டுதோறும் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை நடத்துவது வழக்கம்.

இந்த மாநாட்டில்தான் சட்டம்-ஒழுங்கு, ரசின் திட்டங்கள் போன்றவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு நேற்று காலை தொடங்கியது.

மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய முதலமைச்சர் விஜய், வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசாக இந்த அரசை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகளில் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பொறுத்தவரை, சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறிகூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். மாணவ, மாணவிகள், குழந்தைகள் பாதுகாப்பிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்  என்று தெரிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய்  தலைமையில் 2-வது நாள் மாநாடு தொடங்கியது. காலையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தின் நிறைவில் முதலமைச்சர் விஜய் உரையாற்றுவார்.