
இன்றைய வானிலை...!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பிரதேசங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தொிவித்துள்ளது.
வடக்கு, வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு மலைச் சரிவுகளிலும் 50 கி.மீ வேகத்தில் மிகவும் வலுவான காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் தொிவித்துள்ளது.
இதேவேளை மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பி.ப. 1.00 மணியின் பின் 75 மில்லி மீற்றர் வரையான மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகக் கூடுமெனவும் தொிவிக்கப்பட்டுள்ளது