தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 10 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 10 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

முககவசம் அணியாமல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டமை தொடர்பில் குற்றத்தை ஏற்றுக்கொண்ட 10 பேருக்கு நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்து காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல இன்று உத்தரவிட்டுள்ளார்.

உனவட்டுன - இலுக்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் பிறந்தநாள் நிகழ்வொன்று இடம்பெற்றிருந்த நிலையில் இதன்போது அவர்கள் முககவசம் அணிந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதன்பின்னர் குறித்த 10 பேரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 3 பெண்களும் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது