
வீடியோ கேம் விளையாடியதால் மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!
இணையத்தில் வீடியோ கேம் விளையாடியதால் மாணவர் ஒருவர் மயக்கமுற்று வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தியாவின் புதுச்சேரியில் பதிவாகியுள்ளது.
குறித்த மாணவர் தொடர்ச்சியாக நான்கு மணித்தியாலங்கள் காதுகளில் ஹெட் செட் அணிந்துக்கொண்டு இணையத்தளத்தில் பயர்வேல் என அறியப்படும் வீடியோ கேம் இனை விளையாடியுள்ளார்.
இந்நிலையில் திடீரென மயக்கமுற்ற மாணவரை உறவினர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சிகிச்சையளித்துள்ள வைத்தியர்கள் குறித்த மாணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என அறிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடியதால் மன அழுத்தத்தில் உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் மாணவரின் சடலம் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
தர்சன் என்ற 16 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது