
உர மானிய பொறிமுறை திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி...!
உர மானிய பொறிமுறையை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நெற்பயிர்ச் செய்கைக்காக 382,000 மெற்றிக் டன் உரம் 1.45 பயனாளிகளுக்கு வருடாந்த இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.
அதேபோன்று தற்போது காணப்படுகின்ற பொறிமுறையின் கீழ் நெல் தவிர்ந்த ஏனைய பயிர்களுக்கான உரம் மானியமாக வழங்கப்படும் நிலையில், விவசாயிகள் தவிர்ந்த ஏனைய தரப்பும் பயனடைவதாக தெரியவந்துள்ளது.
இதனால் மதீப்பீட்டு தொகைக்கு மேலதிகமாக அரசாங்கம் வருடாந்தம் செலுத்த வேண்டியுள்ளதால், ஒரு போகத்திற்கு அதிகபட்சமாக 2 ஹெக்டயர் என்ற அடிப்படையில், வருடத்திற்கு இரண்டு முறை உரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெல் தவிர்ந்த ஏனைய பயிர்களுக்கு ஒவ்வொரு பயிர்களுக்குமான ஆராய்ச்சி நிறுவனம் மூலம் நிர்ணயிக்கப்படும் அளவுக்கு அமைய 5 ஏக்கர் வரை உரத்தை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது