
பன்வெலில் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த மாற்றுத்திறனாளியை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் காப்பாற்றினர்.
பன்வெல் ரெயில் நிலையத்தில் 7-வது பிளாட்பாரத்தில் சம்பவத்தன்று மதியம் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ரேனு பட்டேல், போலீஸ்காரர் ஹரிஷ் ஆகியோர் பணியில் இருந்தனர். மதியம் 3.45 மணியளவில் அந்த பிளாட்பாரத்திற்கு ரெயில் ஒன்று வந்தது. அந்த ரெயில் புறப்பட்ட நிலையில், மாற்றுத்திறனாளி ஒருவர் அதில் ஏற முயன்றார்.
அப்போது நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்தார். எனினும் அவர் ரெயிலை பிடித்து கொண்டு அதன் கூடவே ஓடினார்.
இந்தநிலையில் அங்கு பணியில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் வேகமாக செயல்பட்டு மாற்றுத்திறனாளி ரெயில், பிளாட்பார இடைவெளியில் விழுந்துவிடாமல் இழுத்தனர். இதனால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது.
ரெயில்வே பாதுகாப்பு படையினர் மாற்று திறனாளியை காப்பாற்றும் காட்சிகள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை ரெயில்வே பாதுகாப்பு படையினா் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
பலர் ரெயில்வே பாதுகாப்பு படையினரின் பணியை பாராட்டி அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
Watch: Railway Cop Saves Differently-Abled Man From Falling Under Train https://t.co/Ylr9okXuuT pic.twitter.com/RZjWMBFrpE
— NDTV (@ndtv) February 6, 2021