நடத்தை சந்தேகத்தால் ஆத்திரம் - காதலியின் கையை பிளேடால் அறுத்த வாலிபர்

மும்பையில் காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது கையை பிளேடால் அறுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி லோக்கண்ட்வாலா காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் சாகிர்கான். இவர் கடந்த 2 ஆண்டுகளாக வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். மேலும் அவருடன் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார்.

 

இந்தநிலையில் தனது காதலிக்கு வேரொருவருடன் தொடர்பு இருப்பதாக சாகிர்கானுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று சாகிர்கான் தனது காதலியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். 

 

 

அப்போது அந்த பெண், ஆண் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டு இருப்பதை கண்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது காதலியை பிடித்து கையில் பிளேடால் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.

 

இதனால் ரத்த பீரிட்டு வெளியேறி வலியால் துடித்த அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சாகிர்கானை கைது செய்தனர்.