
நீங்கள் தங்கப் பிரியர்களா? தங்கத்தின் மூலம் தேடிவரும் தோஷங்கள் இவைதான்! - சாஸ்திரம் கூறும் நெறிமுறைகள்..
தங்கம் என்பது இது நம்மை வாழவும் செய்யும். வீழ்த்தவும் செய்யும். தங்கத்திற்கும், அதிர்ஷ்டம் தரும் தங்கம், துரதிஷ்டம் தரும் தங்கம் என்று இரண்டு வகைகள் உண்டு. சிலபேர் சிந்திக்கலாம்! தங்கத்திற்கு தரித்திரம் உண்டா என்ன? தங்கத்திற்கு தான் எந்த தோஷமும் அண்டாது என்று சிலர் சொல்லுவார்களே!
அது சரிதான். தங்கத்திற்கு எந்த தோஷமும் அண்டாது. ஆனால் அந்த தங்கம் நம் கைக்கு வந்த பின்பு, அந்த தங்கம் வந்த விதத்தின் மூலம், நமக்கு தோஷம் வரும். அதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது.
பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு வந்த புதிய தங்கத்தில் தான், நாம் வாங்கக்கூடிய எல்லா நகைகளும் செய்யப்படும் என்று சொல்லிவிட முடியாது. நிறைய பேர் தங்களுடைய பழைய நகைகளை, மாற்றி அல்லது விற்று புதிய தங்கத்தை வாங்குவார்கள். இந்த பழைய தங்க நகைகளை உருக்கியும் புது நகைகள் செய்யப்படுகின்றது.
அந்த பழைய தங்க நகை என்பது, எந்த இடத்தில் எந்த சூழ்நிலையில் இருந்து வருவது என்பது நமக்குத் தெரியாது. இறந்தவர்களின் நகைகள், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் நகைகள், அல்லது கஷ்டத்தில் மனவருத்தத்தோடு அடமானம் வைத்து மூழ்கிப் போகும் நகைகள் மற்றும் கஷ்டத்திற்காக தங்களுடைய நகையை விற்பவர்களுடைய நகைகள் இப்படி அடுத்தவர்களுடைய கஷ்டமும், திருடுபோன நகை இன்னும் பல தோஷங்கள் உள்ளடங்கிய நகைகளும் இதில் அடங்கும்.
சிலருக்கு இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். தங்கத்தை நெருப்பில் போட்டு பொசுக்கும் போது, எல்லா தோஷமும் நிவர்த்தி ஆகி விடாதா என்று? இருப்பினும் இப்படிப்பட்ட நகையின் மூலம் செய்யப்பட்ட புதிய நகைகளாகவே இருந்தாலும், அதன் மூலம், அந்த நகையை பெறுபவர்களுக்கு, வாங்கி அணிந்து கொள்பவர்களுக்கும் தோஷம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறது சாஸ்திரம்.
சில பேருக்கு சில தங்க நகைகளை வாங்கியதும் யோகம் அடித்துவிடும். சில பேருக்கு தங்கம் வாங்கும்போது யோகம் வரும். இது அவங்க வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். சில பேருக்கு சில தங்க நகைகளை வாங்கும் நேரம் யோகம் இருக்காது. அதன் பின்பு அவர்களால் நகையும் வாங்க முடியாது. அவர்களிடம் இருந்த பழைய நகைகளும் அடமானம் சென்றிருக்கும். இதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
இதனால் தான் தங்கம் வாங்கும்போது நல்ல நேரம் பார்த்து வாங்க வேண்டும். நல்ல ராசியான கடையில் வாங்க வேண்டும் என்றும் சொல்லுவார்கள். சரி, இப்படிப்பட்ட நகை தோஷமும், நகை தரித்திரம் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளாமல் இருக்க என்ன செய்வது? முடிந்தவரை ஒரு நகையை வாங்கி உங்களுக்கு துரதிஷ்டம் என்று நீங்கள் உணர்ந்தால், இந்த நகையை வாங்கிய நாள் முதல் தான் உங்களுக்கு துரதிஸ்டம் வந்துவிட்டது என்று தெரிந்தால், அந்த நகையை நீங்கள் மாற்றி விடுவதுதான் வழி வேறு வழியே கிடையாது.
இப்படி செய்தால் வரக்கூடிய கஷ்டத்திலிருந்து உடனே தப்பித்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால், நீங்கள் அந்த நகையை வாங்கிய உடனேயே அணிந்து கொள்ளாமல், முதலில் சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, அதன் பின்பு அந்த நகையை மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி விட்டு, நன்றாக உலர வைத்து விட்டு அதன் பின்பும் அணிந்து கொள்ளலாம்.
சுத்தமான காய்ச்சாத பசும்பாலில் அந்த நகையை வைத்து எடுக்கலாம். இப்படி சில விஷயங்களை எல்லாம் செய்துவிட்டு அம்மனுடைய பாதங்களில் புது நகையை வைத்து விட்டு, அதன் பின்பு நீங்கள் போட்டுக்கொள்வது தோஷத்தை நீக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
சுத்தமான, நிஜமான வெள்ளெருக்கு வேரை தங்க நகையில் வைத்தாலும் அதில் இருக்கும் தோஷம் நிவர்த்தி ஆகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக பிறந்த குழந்தைக்கு தங்க நகையை வாங்கி அணிவிக்கும் போது, வாங்கிய புது நகைகளை அப்படியே போட்டு விடாதீர்கள். அந்த நகையை மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு, சுவாமி பாதங்களில் வைத்துவிட்டு, அதன் பின்பு குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தங்க நகைகளுக்கும் உயிர் உண்டு. நல்லது கெட்டதை கிரகித்துக்கொள்ளும் சக்தியும் அந்த தங்க நகைக்கு உண்டு என்பதால் தான் இத்தனை விஷயங்கள் நம்முடைய சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி கொள்ளலாம்.