
மேல் மாகாணத்தில் ஆபத்தான பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் முன்பள்ளி பாடசாலைகளை திறப்பதற்கு அனுமதி..!
மாவட்ட மற்றும் பிரதேச கொவிட்-19 தடுப்பு செயலணிகளின் பரிந்துரைகளுக்கு அமைய, மேல் மாகாணத்தில் ஆபத்தான பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் முன்பள்ளி பாடசாலைகளை எதிர்வரும் 15ம் திகதி முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எமது செய்தி பிரிவு வினவிய போது மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இதனை தெரிவித்தார்.
மேல் மாகாணத்திலுள்ள முன்பள்ளி பாடசாலைகள் ஆரம்பிக்கும் தினம் தொடர்பிலேயே ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளி சங்கங்கள் தொடர்ந்தும் எம்முடன் கலந்துரையாடி வருகின்றனர்.
எனவே எதிர்வரும் 15ம் திகதி முதல் முன்பள்ளி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், மாவட்ட மற்றும் பிரதேச கொவிட்-19 தடுப்பு செயலணிகளின் பரிந்துரைகளுக்கு அமைய மிகவும் ஆபத்தான பகுதிகள் தவிர்ந்த பகுதிகளில் மாத்திரம் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்