அங்கீகரிக்கப்படாத மின் இணைப்பில் சிக்கி 8 வயது சிறுவன் மரணம்..!
சம்பூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டு பகுதியில் அங்கீகரிக்கப்படாத மின் இணைப்பில் சிக்கி 8 வயதான சிறுவர் ஒருவர் மரணமடைந்தார்.
நேற்று இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் மூதூர் பகுதியை சேர்ந்த சிறுவர் ஒருவரே மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணித்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு அனுமதியின்றி மின்சாரம் பெற்ற இருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன