லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய அதன் புதிய விலை 4,765 ரூபாயாகும் 

5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதன் புதிய விலை 1,910 ரூபாயாகும். 

2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி அதன் புதிய விலை 890 ரூபாவாகும்