தமிழகத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 843,209 ஆக அதிகரிப்பு...!

தமிழகத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 843,209 ஆக அதிகரிப்பு...!

தமிழகத்தில் நேற்று 479 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 843,209 ஆக அதிகரித்துள்ளது.

493 பேர் நேற்று கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 826,504 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், நேற்றைய நாளில் 5 மரணங்கள் பதிவான நிலையில், தமிழகத்தில் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 12,396 ஆக அதிகரித்துள்ளது.

4,309 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன