உத்தரகாண்ட் பனிச்சரிவு - ஆறாவது நாளாகவும் தொடரும் மீட்பு நடவடிக்கை!

உத்தரகாண்ட் பனிச்சரிவு - ஆறாவது நாளாகவும் தொடரும் மீட்பு நடவடிக்கை!

இந்தியாவின் உத்தரகாண்ட் பகுதியில் பதிவான பனிச்சரிவை அடுத்து ஏற்பட்ட அனர்த்தத்தின் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

உத்தரகாண்ட்டின் தப்போவன் பகுதியில் 6 தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பனிப்பாறை வெடிப்பை அடுத்து அங்குள்ள மின்னுற்பத்தி நிலையம் ஒன்றின் சிதைவடைந்த சுரங்கத்தில் பலர் சிக்குண்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

இந்த நிலையில் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது.

இதுவரையில் 30 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

300 பேர் வரை காணாமல் போயுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அஜய் குமார் பல்லா தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது