
தஜிகிஸ்தானில் பாரிய நில அதிர்வு..!
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானில் நேற்றிரவு பாரிய நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளிகள் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த நில அதிர்வு வடக்கு இந்தியா மற்றும் டெல்லியிலும் உணரப்பட்டதாக இந்திய ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு 10.30 அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
எனினும் தஜிகிஸ்தானின் சில கட்டிடத்தொகுதிகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன