பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடவுள்ள இலங்கைப்பெண்

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடவுள்ள இலங்கைப்பெண்

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவரும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மேமாதம் 06 ஆம் திகதி பிரித்தானிய மில்டன் கென்ஸ் கவுன்ஸில் தேர்தலிலேயே இவர் போட்டியிடவுள்ளார்.

இவ்வாறு தேர்தலில் போட்டியிடவுள்ளவர் ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலின் மகளான ஷஷ்னா முஸம்மில் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் கன்ஷவேட்டிவ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, அவர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவின் மில்டன் கென்ஸ் பகுதியில் வாழ்ந்துவரும் அவர், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

ஷஷ்னா முஸம்மில் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் அவர், கொழும்பு மாநகர சபை மேயரின் பிரத்தியேக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அதேபோன்று, இலங்கையிலுள்ள பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் அவர் கடமையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது மேல்நிலை கல்வியை தொடர்வதற்காகவும், பிரித்தானியாவில் குடியேறும் நோக்குடனும் சென்ற அவர், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று, சமுக சேவைகளிலும் ஈடுபட்டு வந்த பின்னணியிலேயே, தேர்தலிலும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.