உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான முகாமைத்துவ சுட்டெண் உயர்வு

உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான முகாமைத்துவ சுட்டெண் உயர்வு

ஜனவரி மாதத்தில் உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான முகாமைத்துவ சுட்டெண் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதற்கமைய, உற்பத்திக்கான முகாமைத்துவ சுட்டெண்ணானது கடந்த ஜனவரி மாதத்தில் 60.2 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் சேவைக்கான முகாமைத்துவ சுட்டெண்ணானது 56.2 ஆக  பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட சேவைத்துறையினை மீண்டும் வலுவூட்டுவதற்கு இது பெரிதும் துணைபுரியும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.