சுவற்றுக்கும் கதவுக்கும் இடையே சிக்கிய 5 வயது சிறுவன்.. நேரில் பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர்கள்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில், அரபு நாட்டினை சேர்ந்த தம்பதி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்கள்.
இவர்களுக்கு 5 வயது சிறுவன் இருக்கும் நிலையில், நேற்று சிறுவன் வீட்டின் உள்புற அறையில் உள்ள கதவில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான்.
அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவன் கதவிற்கும் - சுவற்றுக்கும் இடையே சிக்கிக்கொள்ளவே, கதவு சிறுவனின் உடலை நசுக்கி உயிருக்காக போராடியுள்ளான்.
இதனையடுத்து, வீட்டிற்கு வெளியே இருந்த பெற்றோர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது மகன் உயிருக்கு போராடுவது தெரியவந்துள்ளது.
உடனே, மயக்கமடைந்து இருந்த சிறுவனை மீட்ட பெற்றோர்கள், அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்