அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைக் காலம் நீடிப்பு
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பயண தடைக்கான காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரையில், இந்த பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கடந்த வருடம் முதல் இடைக்கால பயணத்தடையை விதித்துள்ளன.
அமெரிக்காவில் இருந்து கனடா மற்றும் மெக்சிக்கோ நாடுகளுக்கு செல்லும் எல்லை பகுதிகளிலும் கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இவ்வாறு விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளுக்கான காலம் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதற்கான காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது மக்களின் பாதுகாப்பினை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்