ரஷ்யாவின் 3 ஆவது கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதி! - பிரதமர் மிகைல் மிஸ்டின்

ரஷ்யாவின் 3 ஆவது கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதி! - பிரதமர் மிகைல் மிஸ்டின்

ரஷ்யாவினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 3 ஆவது கொவிட்-19 தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மிகைல் மிஸ்டின் தெரிவித்துள்ளார்.

கொவிவாக் என்ற இந்த தடுப்பூசி எதிர்காலத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த அனுமதி வழங்கல் தொடர்பில் உலகளாவிய ரீதியில் உள்ள விஞ்ஞானிகள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனைக்கு முன்பே ஸ்புட்னிக் - 05 தடுப்பூசிக்கும் மேலும் ஒரு தடுப்பூசிக்கும் ரஷ்யாவினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதே அணுகுமுறையை தற்போதைய தடுப்பூசி விடயத்திலும் பின்பற்றப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனினும் முன்கூட்டியே அனுமதியளிக்கப்பட்ட தடுப்பூசிகளின் இறுதி அறிக்கை கிடைத்த பின்னரே பொது மக்களுக்கு செலுத்தும் நடவடிக்கையினை ரஷ்யா ஆரம்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 88 மில்லியன் கொவிட் 19 தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

அவற்றுள் 83 மில்லியன் ஸ்புட்னிக் - 05 தடுப்பூசிகள் அடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.