முதல் முறையாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல்!

முதல் முறையாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல்!

ரஷ்யாவில் முதல்முறையாக மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பறவை காய்ச்சல், கோழிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி உள்ளது.

ரஷ்யாவின் நுகர்வோர் சுகாதார பாதுகாப்பு கண்காணிப்பு குழுவின் தலைவர் அனா பொபோவா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவின் தென் பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில இருந்து, கடந்த டிசம்பர் மாதம், 7 தொழிலாளர்களுக்கு இந்தத் தொற்றுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 பேரும் தற்போது உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நோய்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு போதுமான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யாவின் நுகர்வோர் சுகாதார பாதுகாப்பு கண்காணிப்பு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்