மியன்மாரில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரங்கணக்கானோர் கலந்து கொண்டனர்

மியன்மாரில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரங்கணக்கானோர் கலந்து கொண்டனர்

மியன்மாரில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்தில் மரணித்த பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரங்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தமது 20 ஆவது பிறந்த தினத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட குறித்த பெண் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் அவரது சடலத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நேற்றைய தினம் வீதி ஓரங்களில் ஆயிரங்கணக்கான மக்கள் கூடியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மியன்மாரில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களில் இதுவரையில் மூவர் உயிரிழந்தனர்.

அந்த நாட்டு இராணுவத்தினரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

மியன்மாரில் இந்த மாத ஆரம்பத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற அரசாங்கத்தை வலுவற்றதாக்கி இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.

தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து மியன்மாரில் இராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

எவ்வாறாயினும் தேர்தல் மோசடிக்கான ஆதாரங்கள் எவற்றையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.