ஆங் சான் சூ கியை விடுவிக்க வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தல்

ஆங் சான் சூ கியை விடுவிக்க வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தல்

ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட கட்சியின் தலைவரான ஆங் சான் சூ கியை விடுவிக்க வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் டொமினிக் ராப் இதனைத் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் தேர்தல் மூலம் தெரிவான அரசாங்கத்தை கலைத்து, இராணுவ சூழ்ச்சிமூலம் ஆட்சியமைக்கப்பட்டிருக்கின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த நாட்டின் ஜனநாயகம் மீள ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற போராட்டத்தினால் 2 பேர் கொல்லப்பட்டனர்.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்துவது கண்டனத்துக்குரியது என்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்