
ஸ்ரீலங்காவை வந்தடைந்த மற்றுமொரு தொகுதி தடுப்பூசிகள்!
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் 5 இலட்சம் ஸ்ரீலங்காவை வந்தடைந்துள்ளன.
இந்த தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து இன்று ஸ்ரீலங்காவை வந்தடைந்ததாக கொவிட் வைரஸ் கட்டுப்பாட்டு இராஜாங்க பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா மருந்ததக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய சீரம் நிறுவனத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்ததிற்கு அமைய இந்தியாவிலிருந்து 5 லட்சம் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இவை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இரண்டாவது தொகுதி கொரோனா தடுப்பூசிகளாகும்.
ஏற்கனவே ஸ்ரீலங்கா இந்தியாவிடமிருந்து 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை கடந்த ஜனவரி மாதம் பெற்றுக்கொண்டிருந்தது.
அத்துடன் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஸ்ரீலங்காவின் பல பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை தெஹிவளையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, மார்ச் மாதம் முதல் வாரத்தில் 2 இலட்சம் தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் என சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது தடுப்பூசி இலங்கையில் 10 தொடக்கம் 12 வாரங்களுக்குள் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் இது ஏப்ரல் மாத நடுப்பகுதியில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.