அமெரிக்க அதிபர் 2 தடவைக்கு மேல் போட்டியிட தடை சட்டம்- பிப்.27-1951

அமெரிக்காவில் 4 வருடங்களுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபருக்கு போட்டியிட முடியாதவாறு 1951-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது.

அமெரிக்காவில் 4 வருடங்களுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபருக்கு போட்டியிட முடியாதவாறு 1951-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்-

 


1844 - டொமினிக்கன் குடியரசு ஹெயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது. 1861 - போலந்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து வார்சாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர். 1900 - இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவில் போவர்களின் தளபதி பியெட் குரோனியே நிபந்தனையயின்றி சரணடைவதாக அறிவித்தார். 1900 - பிரித்தானிய தொழிற்கட்சி அமைக்கப்பட்டது. 1933 - பெர்லினில் ஜெர்மனியின் நாடாளுமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்டது. 1940 - ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது. 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜாவா கடலில் இடம்பெற்ற போரில் கூட்டுப் படைகளை ஜப்பான் படைகள் தோற்கடித்தன. 1951 - ஐக்கிய அமெரிக்காவில் அதிபர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

1967 - டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1976 - முன்னாள் ஸ்பானிய நாடான மேற்கு சகாரா சாராவி அரபு ஜனநாயகக் குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது. 1991 - வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் குவைத் விடுதலையானதாக அறிவித்தார். 2002 - குஜராத் வன்முறை 2002: அயோத்தியாவில் இருந்து ரெயிலில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

2004 - பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர். 2007 - மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஏவுகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.