பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 3,871 பேர் கைது!
நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 3,871 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் 18,357 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,430 பேரும், குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்ட மற்றும் சில குற்றச் செயல்கள் தொடர்பான சந்தேகத்தில் 562 பேரும், ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் குற்றங்கள் தொடர்பில் 552 பேரும், மதுபானம் தொடர்பான குற்றச்சாட்டில் 556 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த 16 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 607 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்