விஞ்ஞானப் பிரிவில் சாதனைப் படைத்த முல்லைத்தீவு மாணவி..
வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மகாவித்தியால மாணவி விஞ்ஞானப்பிரிவில் முதலிடம் பெற்று முல்லைத்தீவு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
சிறந்த பெறுபேறு..
2025 ஆண்டுக்கான கா. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முல்லைத்தீவு மகாவித்தியால முஸ்லிம் மாணவி விஞ்ஞானப்பிரிவில் முதலிடம் பெற்று வைத்திய துறைக்கு தெரிவாகியுள்ளார்.
முல்லைத்தீவினைச் சேர்ந்த M. நிதா பாதிமா எனும் மாணவியே விஞ்ஞான பிரிவில் முதன்நிலை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.