உணவுக்கு பதிலாக டெலிவரி பார்சலில் வந்த சிறுநீர்... கடும் அதிர்ச்சியில் உறைந்து போன வாடிக்கையாளர்!
இங்கிலாந்தில் பார்சல் டெலிவெரியில் சிறுநீர் அடைக்கப்பட்ட பாட்டில் இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கால், பலரும் ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்தனர்.
லண்டனைச் சேர்ந்த ஒருவரும் தனக்கு தேவையான உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அப்போது, அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பார்சலை திறந்து பார்த்தபோது அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார்
We truly lack the words to describe how sorry we are because of this. Could you please send us a DM so we could deal with this as soon as possible?
— HelloFresh UK (@HelloFreshUK) February 21, 2021
-Harry
வாடிக்கையாளருக்கு வந்த பார்சலில் சிறுநீர் அடைக்கப்பட்ட பாட்டில் ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து அவர் டிவிட்டரில் புகைப்படத்துடன் அந்த பார்சலை பதிவிட்டதையடுத்து, அந்த புகைப்படமானது இணையத்தில் வைரலானது.
உணவை டெலிவரி செய்த நிறுவனத்தின் பெயருடன் டிவிட்டரில் பதிவிட்ட ஆலிவர், "ஹலோ! பிரஷ் யூகே, எதற்காக யாரோ ஒருவருடைய சிறுநீரை பாட்டிலில் அடைத்து எனக்கு அனுப்பியிருக்கிறீர்கள்? உங்கள் பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்.
சந்தேகம் இருந்தால் உங்களின் முகவரியை எனக்கு அனுப்புங்கள், நீங்கள் அனுப்பிய பார்சலை திருப்பி அனுப்புகிறேன், அதன் முகர்ந்து பாருங்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
குறித்த நபரின் குற்றச்சாட்டையடுத்து, அவருக்கு உணவை அனுப்பிய ஹலோ பிரஷ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
உங்களுக்கு ஏற்பட்ட இந்த மோசமான நிகழ்வுக்கு என்ன சொல்வது என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், தங்கள் நிறுவனம் டெலிவரி செய்யும் உணவுடன், தண்ணீர் பாட்டில்களை ஒருபோதும் அனுப்புவதில்லை என தெரிவித்துள்ளதுடன், டெலிவரி செய்பவர்களிடம் இதுபோன்று தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த செயல் சமூகவலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.