ஐக்கிய நாடுகள் சபைக்கான மியன்மார் தூதுவர் பணி நீக்கம்
ஐக்கிய நாடுகள் சபைக்கான மியன்மார் தூதுவரை அந்த நாட்டின் இராணுவம் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மியன்மாரின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு அதிகாரத்தை திருப்பித் தரும் வரை யாரும் இராணுவத்துடன் ஒத்துழைக்கக் கூடாது என்று கூறினார்.
இதனையடுத்தே ஐக்கிய நாடுகள் சபைக்கான மியன்மார் தூதுவர் கியாவ் மோ துன்னை அந்த நாட்டின் இராணுவம் பணியில் இருந்து நீக்கியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மியன்மார் தலைவர் ஆன் சான் சூகி உள்ளிட்ட அரச தலைவர்களை தடுத்து வைத்து நாட்டின் ஆட்சியை அந்த நாட்டின் இராணுவம் கடந்த முதலாம் திகதி கைப்பற்றியிருந்தது.
பின்னர் இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டதுடன் அந்த நாட்டின் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது