ஈராக்கிற்கான முதல் சுற்றுப் பயணத்திற்குத் தயாராகிறார் பாப்பரசர்
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக்கிற்கான தனது முதல் சுற்றுப் பயணத்திற்கு தயாராகி வருகிறார்.
84 வயதுடைய பாப்பரசர் தனது ஈராக் பயணத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
ஈராக்கில் வரலாற்று ரீதியாக பெரும்பான்மையான கிறிஸ்தவ மக்கள் இருந்தபோதிலும் தற்போது அங்குள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்திலிருந்து 4 இலட்சமாகக் குறைவடைந்துள்ளது.
ஈராக் கிறிஸ்தவர்கள் ஐ.எஸ் அமைப்பினரால் தாக்கப்படுவதே இதற்கான முக்கிய காரணம்.
ஈராக் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே பாப்பரசர் ஈராக்கிற்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.