டெக்ஸாஸ் மாநிலத்தில் முகக்கவசங்களை அணியாது வர்த்தகங்களில் ஈடுபடுவதற்கு அனுமதி

டெக்ஸாஸ் மாநிலத்தில் முகக்கவசங்களை அணியாது வர்த்தகங்களில் ஈடுபடுவதற்கு அனுமதி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் முகக்கவசங்களை அணியாது வர்த்தகங்களில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது.

இந்த நடைமுறையானது அடுத்த வாரம் முதல் அமுல்ப்படுத்தப்படும் என டெக்ஸாஸ் மாநிலத்தின் ஆளுநர் கிரேக் அபோட் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்று காரணமாக அமெரிக்காவில் அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மிகப்பெரிய மாநிலங்களின் ஒன்றான டெக்ஸாஸில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் முதல் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், அங்குள்ள வர்த்தகர்கள் பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளதாக கிரேக் அபோட் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் 19 தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதால் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் முதல் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெக்ஸாஸ் மாநிலத்தில் மாத்திரம் இதுவரையில் 42,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்