கொவிட் சரீரங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொவிட் சரீரங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொரோனாவால் மரணிப்பவர்களின் சரீரங்களை கிளிநொச்சி - இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரணைத்தீவைச் சேர்ந்த மக்களே இவ்வாறு மேற்படி தீர்மானத்திற்கு எதிராக  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை இரணைதீவில், சரீரங்களை அடக்கம் செய்வதற்காக நேற்று மாலை குழிகள் தோண்டப்பட்டிருந்தாக இரணைதீவு பங்குத்தத்தை அருட்தந்தை மடுத்தீன் அடிகளார் தெரிவித்திருந்தார்