2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவருக்கு செவி திறன் பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவருக்கு செவி திறன் பிரச்சினை ஏற்படக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகளவில் செவி திறன் பிரச்சினையால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பல்வேறு பாதிப்புகள் காரணமாக காது கேளாமை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் ஐந்தில் ஒருவர் செவி திறன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, அடுத்த மூன்று தசாப்தங்களில் செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை ஒன்றரை மடங்கை விட அதிகரிக்கக் கூடும் என குறிப்பிட்டுள்ளது.
கவனிப்பாராற்ற நிலையே செவித்திறன் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சிகிச்சை அளிக்க குறைந்த வல்லுனர்களே காணப்படுகின்றனர்.
இதுபோன்ற நாடுகளில் அதிகளவானோருக்கு காது கேளாமை பிரச்சினை காணப்படுகின்றது.
அவர்களுக்கு தேவையான உதவிகள் உரிய முறையில் கிடைப்பதில்லை
அதேநேரம் செல்வந்த நாடுகளிலும் செவித்திறன் பிரச்சினையில் சிகிச்சை சீரற்றதாக காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த பிரச்சினை உரிய முறையில் கவனிக்கப்பாடமையினால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் இழக்கப்படுகிறது.
பொது இடங்களில் சத்தத்தை குறைப்பது முதல் காது கேளாமை மற்றும் மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.