அமெரிக்காவில் ஆசிரியர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி வழங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை
அமெரிக்காவில் மாணவர்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் பாடசாலைக்கு திரும்புவதை உறுதி செய்வதற்காக ஆசிரியர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன், மாநில அரசாங்கங்களிடம் கோரியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கல்வி துறைசார் அனைவரும் இந்த மாத இறுதிக்குள் முதலாவது கொவிட்-19 தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது மூன்று கொவிட்19 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் மே மாத இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ள அனைத்து வயோதிபர்களுக்கும் போதுமான தடுப்பூசி கிடைக்கும் என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 பரவலை தடுப்பதற்காக தொடர்ந்தும் முககவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சுட்டிக்காட்டியுள்ளார்