தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 16 பேர் பலி

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 16 பேர் பலி

நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான சொகொட்டோவில் டரா கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போஹோஹராம் தீவிரவாதிகள் பழங்குடியினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த தாக்குதலும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் குறித்த கிராமத்திற்குள் சென்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், குறித்த தாக்குதலுக்கு பொஹோஹராம் தீவிரவாதிகள் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

எவ்வாறாயினும், தாக்குதல் நடத்தப்பட்ட கிராமத்தில் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன