கொவிட்-19 பரவலால் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள பிரேஸில்

கொவிட்-19 பரவலால் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள பிரேஸில்

கொவிட்-19 பரவலால் பிரேஸில் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.

பிரேசிலில் பிரதான நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் அதிகளவான கொவிட்19 நோயர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில் பெருமளவான நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலை அதிகரித்தால் அவசர சிகிச்சை பிரிவுகளில் நோயாளர்களை அனுமதிக்க முடியாத நிலை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது அவரச சிகிச்சை பிரிவுகளில் 80 சதவீதமான கொவிட்-19 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் பிரேசிலில் நேற்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 987 கொவிட்19 நோயாளர்கள் உயிரிழந்தனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக அதிகளவான கொவிட்19 மரணங்கள் பிரேசில் நாட்டிலேயே பதிவாகியுள்ளது.

அந்த நாட்டில் இதுவரை 2 லட்சத்து 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொவிட்19 தொற்றால் மரணித்தனர்.

பிரேஸிலில் 11 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது