ஜோ பைடனின் கொரோனா நிவாரண நிதி சட்டமூலம் நிறைவேற்றம்

ஜோ பைடனின் கொரோனா நிவாரண நிதி சட்டமூலம் நிறைவேற்றம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கொரோனா நிவாரண நிதி சட்டமூலம் அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொவிட்19 தொற்று பரவலால் சரிவடைந்த அமெரிக்க பொருளாதாரத்தை மீட்பதற்காக 1.9 லட்சம் கோடி அமெரிக்க டொலரை செலவிடுவதற்கான திட்டத்தை அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் கொண்டு வந்தார்.

இதற்கான கொரோனா நிவாரண சட்டமூலம் நீண்ட இழுபறிக்கு பின்னர் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.

1.4 டிரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த நிவாரண சட்டமூலம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, இந்த சட்டமூலத்தால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன் பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

திட்டத்தின் மூலம் விரைவில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும்.

இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டொலர் வழங்கும் பணி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கொரோனா நிவாரண நிதி சட்டமூலம் அமெரிக்க காங்கிரஸிலும் நிறைவேறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த சட்ட மூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது