
செல்பி விவகாரம்: பார்வையாளர்களை சந்திக்க ரஞ்சனுக்கு தடை
தற்போது விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பார்வையாளர்களை சந்திப்பதற்கு இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்தார்.
அண்மையில் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திப்பதற்காக சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா அவருடன் செல்பி புகைப்படம் எடுத்திருந்தார்.
இந்நிலையில், அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் ஒழுக்காற்று நிலையத்திற்கு இன்றைய தினம் ரஞ்சன் ராமநாயக்க அழைக்கப்பட்டிருந்தார்.
சிறைச்சாலைகள் கட்டளை சட்டத்தின் 78வது பிரிவிற்கமைய அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்போது தான் செல்பி புகைப்படம் எடுத்தமை தொடர்பான குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் சிறைக்கு வரும் பார்வையாளர்களை சந்திக்க ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவருடன் புகைப்படம் எடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சனவுக்கு அனுமதி வழங்கியிருந்த சிறைக்காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார்