மியன்மார் அமைச்சருக்கு விடுத்த அழைப்பை மீள பெற கோரும் சஜித்
இலங்கையில் இடம்பெறவுள்ள பிம்ஸ்ரெக் மாநாட்டில் பங்கேற்குமாறு மியன்மார் வெளிவிவகார அமைச்சருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மீள பெற வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை சீர்குலைத்து, இராணுவ மயமாக்கலின் ஊடாக அநீதியாக உருவாக்கப்பட்ட ஆட்சியொன்று தற்போது மியன்மாரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர், மியன்மாரில் இடம்பெற்றுள்ள இராணுவமயமாக்கல் சர்வாதிகார, தன்மையை கவனத்திற்கொள்ளாது, இராணுவமயமான அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள வெளிவிவாகார அமைச்சருக்கு பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்குமாறு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இது சர்வதேச தொடர்புகளுக்கு இடையில் இடம்பெறுவதால், நான் நினைக்கிறேன் இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச தொடர்புகள் குறித்து சிறந்த அறிவு இல்லாத நிலையில் இந்த பாரிய குற்றத்தை இழைக்கப்பட்டுள்ளது.
சரியாயின், ஆங் சான் சூகி தலைமையில் ஜனநாயக ரீதியிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக ஆக குறைந்தது அறிவிப்பு ஒன்றையாவது இலங்கை அரசாங்கம் விடுத்திருக்க வேண்டும்.
இந்தநிலையில் குறித்த அழைப்பினை உடனடியாக மீள பெறுமாறு அரசாங்கத்திடமும், வெளிவிவகார அமைச்சரிடமும் கோருவதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.