ஸ்கொட்லாந்தில் வெளிப்புறங்களில் மக்களைச் சந்திப்பதற்கான விதிகளில் தளர்வு!

ஸ்கொட்லாந்தில் வெளிப்புறங்களில் மக்களைச் சந்திப்பதற்கான விதிகளில் தளர்வு!

ஸ்கொட்லாந்தில் வெளிப்புறங்களில் மக்களைச் சந்திப்பதற்கான விதிகளில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வெவ்வேறு வீடுகளில் இருந்து, நான்கு பெரியவர்கள் வரை இப்போது தனியார் தோட்டங்கள் உட்பட எந்த வெளிப்புற இடத்தில் சந்திக்கலாம்.

அத்துடன் இளைஞர்கள் மீதான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. 12-17 வயதுக்குட்பட்ட நான்கு பேர் அனைவரும் வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சந்திக்க முடியும்.

பெரியவர்களுக்கான வெளிப்புற தொடர்பு அல்லாத குழு விளையாட்டுகளும் மறுதொடக்கம் செய்யப்பட்டுள்ளன.

முடக்கநிலையை எளிதாக்குவதற்கான அரசாங்கத்தின் முந்தைய திட்டம், இரண்டு வீடுகளில் இருந்து நான்கு பேரை வெளியில் சந்திக்க அனுமதிப்பது மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் நடக்க வாய்ப்பில்லை.