பிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் கொரோனா வைரஸ் 40 இலட்சத்து15ஆயிரத்து 560பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை மொத்தமாக 90ஆயிரத்து 146பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 25ஆயிரத்து 229பேர் பாதிக்கப்பட்டதோடு 254பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 36இலட்சத்து 53ஆயிரத்து 736பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்காயிரத்து 33பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை இரண்டு இலட்சத்து 71ஆயிரத்து 678பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்