எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இத்தாலியில் பல இடங்களை மூடுவதற்கு தீர்மானம்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இத்தாலியில் பல இடங்களை மூடுவதற்கு தீர்மானம்

இத்தாலியில் பரவும் புதிய உருதிரிபடைந்த கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அந்த நாட்டின் பாடசாலைகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி (Mario Draghi) இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் பேண வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் மாத்திரம் இதுவரையில் ஒரு இலட்சத்து ஆயிரத்து 564 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது