அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை மூன்று கோடியைக் கடந்தது
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுறுதியானோர் எண்ணிக்கை மூன்று கோடியைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 47 ஆயிரத்து 960 பேருக்கு தொற்றுறுதியானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 3 கோடியே 42 ஆயிரத்து 814 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் 988 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, அமெரிக்காவில் கொவிட்-19 நோயினால் மரணித்தோர் எண்ணிக்கை 5 இலட்சத்து 46 ஆயிரத்து 556 ஆக அதிகரித்துள்ளது.
2 கோடியே 21 இலட்சத்து 7 ஆயிரத்து 924 பேர் குணமடைந்துள்ளனர்.
73 இலட்சத்து 88 ஆயிரத்து 334 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன