9 வயது மாணவரை பலியெடுத்த தலைமன்னார் விபத்து: 24 பேர் காயம் (முழுமையான விபரம்)

9 வயது மாணவரை பலியெடுத்த தலைமன்னார் விபத்து: 24 பேர் காயம் (முழுமையான விபரம்)

தலைமன்னாரில், தொடருந்து ஒன்றுடன், தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.

9 வயது மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான பேருந்தில் 30 பேர் பயணித்துள்ளனர்.

அவர்களில், 20 பேர் மாணவர்கள் என காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.

மன்னாரிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த பேருந்து, தொடருந்துடன் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த 24 பேர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்