
இந்த நாட்களில் முக்கியமாக திருமணம் செய்யக்கூடாது என சொல்வது ஏன் தெரியுமா?
பொதுவாக திருமணம் செய்ய வேண்டும் என்றால் நாள் நல்ல நேரம் என அனைத்தையும் பார்த்து தான் முடிவு செய்வார்கள்.
மேலும், கரிநாட்களில் சுப காரியங்கள் செய்யக்கூடாது என்றும் கூறுவர். அதில் உள்ள காரணம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏன் செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொள்வோம்.
கரிநாட்களில் சூரிய கதிர் வீச்சு பூமிக்கு அதிகமாக கிடைக்கும். அவை நம் உடம்பில் உள்ள அனைத்து சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்களை சராசரியை விட சற்று அதிகமாக தூண்ட வைக்கும்.
மேலும், இந்த நாட்களில் நாம் உணர்ச்சி வசப்படுதல், கோபப்படுதல், யோசிக்காமல் முடிவெடுத்தல், குழப்பம் போன்றவற்றை செய்ய நேரிடும்.
எனவே தான் கரி நாட்களில் திருமணம் போன்ற சுபகாரியங்களை செய்யவேண்டாம் என்கின்றனர். அன்றைய தினங்களில் அதிக வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சூரிய கதிர்வீச்சு உடல் உறுப்புகளை பாதிக்கும்