இம்ரான் கானின் மனைவிக்கும் கொரோனா

இம்ரான் கானின் மனைவிக்கும் கொரோனா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மனைவிக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம்  அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

சீனாவினால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்தி 48 மணித்தியாலங்களின் பின்னர் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி இம்ரான் இவ்வாறு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது