நேற்று அதிகளவில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டம்

நேற்று அதிகளவில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டம்

நாட்டில் நேற்றைய தினம் தொற்றுறுதியான 271 பேரில் அதிகளவானோர் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

அந்த மாவட்டத்தில் நேற்றைய தினம் மாத்திரம் 77 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 64 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 27 பேரும் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 20 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானது.

இந்தநிலையில் நாட்டில் இதுவரையில் 91 ஆயிரத்து 289 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 87 ஆயிரத்து 881 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

தொற்றுறுதியான 2 ஆயிரத்து 851 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு தெளிவூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் குறிப்பிட்டார்