சுயெஸ் கால்வாயில் தரைதட்டியுள்ள கப்பலின் மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு
சுயஸ் கால்வாயில் தரைதட்டியுள்ள கப்பலை வழமைக்கு கொண்டு வரும் செயற்பாடுகள் ஆறாவது நாளாகவும் தொடர்கின்றன.
இதற்கிடையில் கப்பலில் உள்ள கொள்கலன்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எகிப்தின் ஜனாதிபதி அப்டெல் பட்டாஹ் எல்-சிசி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமை கப்பல் சிக்கியுள்ள பகுதியிலுள்ள மணலை அகழ்ந்தெடுக்கும் செயற்பாடு தோல்வியடைந்தால் முக்கிய வர்த்தக செயற்பாடுகள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த கப்பல் தரைதட்டியுள்ளமையால் சுயஸ் கால்வாயில் பயணித்த 320 கப்பல்களின் பயணங்கள் தாமதமடைந்துள்ளன.
தரைதட்டியுள்ள கப்பலினை மிதக்க வைக்கும் நோக்கில் பல்லாயிரக்கணக்கான டன் நிறை கொண்ட மண் கப்பலின் அடிப்பாகத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை குறித்த கப்பல் தரைதட்டியது.
இந்தநிலையில் பயண தாமதமான சில கப்பல்கள் ஆபிரிக்காவை சுற்றி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளன