இந்தோனேஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ!

இந்தோனேஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ!

இந்தோனேஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றில் திடீரென தீ ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேற்கு ஜகார்த்தாவிலுள்ள பலொன்கென் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட இந்த தீயினால் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் 950 பேர் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுத்திகரிப்பு நிலையம் தீப்பற்றி எரியும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் அதேவேளை, பாரிய வெடிப்பு சத்தம் கேட்பதை அதனூடாக அவதானிக்க முடியுமானதாக உள்ளது.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தினசரி ஒரு இலட்சத்து 25 ஆயிரம் எண்ணெய் பெரல்கள் சுத்திகரிக்கப்படுவதாக இந்தோனோஷிய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது